Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிரிய அதிகாரிகள் குற்றவியல் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்: ஸ்பெய்ன் நீதிமன்றம்

In ஐரோப்பா
Updated: 10:40 GMT, Mar 28, 2017 | Published: 10:39 GMT, Mar 28, 2017 |
0 Comments
1257
icon_com
This post was written by : Sylviya
10

சிரியாவின் ஒன்பது அரச அதிகாரிகள் குற்றவியல் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என ஸ்பெய்னின் நீதிமன்றம் ஒன்று அறிவித்துள்ளது.

சிரியாவில் பிறந்த ஸ்பெய்ன் நாட்டு பெண் ஒருவர், அவரது சகோதரர் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு 2013 ஆம் ஆண்டு சிரிய பாதுகாப்பு படையினரால் தூக்கிலிடப்பட்டார் என தெரிவித்ததை தொடர்ந்தே குறித்த விடயம் ஸ்பெய்ன் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

மேற்குறித்த பெண்ணின் சகோதரர் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டமையை நிரூபிக்கும் வகையிலான புகைப்படங்கள் தடயவியல் புகைப்படக் கலைஞர் ஒருவரால் சூட்சுமமான முறையில் சிரியாவில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்ட குறித்த ஒன்பது பேரும் சிரியாவின் பாதுகாப்பு மற்றும் புலனாய்வு படைகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg