Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசை: இந்தியா தொடர்ந்தும் முதலிடம்

In கிாிக்கட்
Updated: 11:30 GMT, Mar 28, 2017 | Published: 10:24 GMT, Mar 28, 2017 |
0 Comments
1113
icon_com
This post was written by : Risha
india-

டெஸ்ட் அணிகளுக்கான சர்வதேச கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் 122 புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடத்தை பெற்றுள்ளது.

தரவரிசையில் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ள இந்திய அணிக்கு, அதனை கௌரவிக்கும் வகையில் சர்வதேச கிரிக்கெட் சபையினால் வழங்கப்படும் கதாயுதமும், ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் பணப்பரிசும் வழங்கப்பட்டுள்ளது.

ஐ.சி.சி சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் கதாயுதத்தை இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லியிடம் வழங்கியுள்ளார்.

அவுஸ்ரேலிய அணிக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா இன்று வென்றது. இதன் மூலம் தொடர்ச்சியாக 7 டெஸ்ட் தொடர்களை வென்ற பெருமையை அணித்தலைவர் விராட் கோஹ்லி பெற்றுள்ளார்.

இதேவேளை, 2016ஆம் ஆண்டிற்கான சிறந்த வீரர் மற்றும் சிறந்த டெஸ்ட் வீரர் ஆகிய இரண்டு விருதுகளை இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பெற்றுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg