Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒன்ராறியோவில் நாளொன்றிற்கு ஒருவர் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகின்றனர்

In கனடா
Updated: 10:49 GMT, Mar 28, 2017 | Published: 10:49 GMT, Mar 28, 2017 |
0 Comments
1111
icon_com
This post was written by : Risha
gun

ஒன்ராறியோவில் நாளொன்றில் ஒரு குழந்தை அல்லது ஓர் இளைஞர் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காவதாக கனடிய மருத்துவ சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

25 வயதிற்கு உட்பட்டோர் மீதான துப்பாக்கிச்சூடு தொடர்பில் 2008ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படியே இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையின் பிரகாரம் ஆண்டுதோறும் சுமார் 355 பேர் துப்பாக்சிச் சூட்டிற்கு இலக்காகி காயமடைவதாகவும், அவர்களுள் 7 வீதமானோர் உயிரிழப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி பலர் பார்வை மற்றும் அவயவங்களை இழப்பதாகவும், எனினும், 75 வீதமான சம்பவங்கள் பாரிய பிரச்சினையை ஏற்படுத்துவதாக இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg