Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஹைட்ரோ கார்பன் திட்ட ஒப்பந்தம்: மெரீனாவில் தீவிர கண்காணிப்பு

In இந்தியா
Updated: 10:46 GMT, Mar 28, 2017 | Published: 10:43 GMT, Mar 28, 2017 |
0 Comments
1188
icon_com
This post was written by : Elakkiya
Marina_Beach_as_seen_from_Light_house.

விவசாயிகள், மாணவர்கள் பொதுமக்கள் என பலரது எதிர்ப்புகளையும் மீறி ஹைட்ரோ கார்பன் திட்ட உடன்படிக்கையில் மத்திய அரசு கைச்சாத்திட்டுள்ள நிலையில், மீண்டும் எதிர்ப்பு போராட்டங்கள் வெடிக்கும் என்ற அச்சத்தில் மெரீனாவில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

நெடுவாசல் உள்ளிட்ட 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தினை செயற்படுத்துவதற்கான ஒப்பந்தங்கள் பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் நேற்று (திங்கட்கிழமை) கைச்சாத்திடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் மேற்படி ஹைட்ரோ கார்பன் திட்டத்தினால் விவசாயம் மற்றும் நிலத்தடி நீர் பாதிக்கப்படும் என்று கூறி ஏற்கனவே பல்வேறான போராட்டங்கள் பரந்தளவில் நடத்தப்பட்டிருந்த நிலையில், மக்களுடன் கலந்து ஆலோசித்த பின்னரே இந்த திட்டம் நிறைவேற்றப்படும் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

எனினும் அதற்கு மாறாக தற்போது ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதால் மீண்டும் தமிழகம் முழுவதும் போராட்டம் ஆரம்பிக்கும்; என்ற நிலை உருவாகியுள்ளது. அதற்கேற்ப தமிழகம் முழுவதும் இளைஞர்கள் தரப்பில் சமூக வலைதளங்களில் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஒன்றுகூடியது போன்று விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தப்படலாம் என்ற நிலையில் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg