Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மக்கள் பிரச்சினைகளை அரசியலாக்க வேண்டாம்: பன்னங்கண்டி மக்கள்

In இலங்கை
Published: 10:49 GMT, Mar 28, 2017 |
0 Comments
1143
icon_com
This post was written by : Varshini

தம்மை வந்து சந்திக்கும் அரசியல்வாதிகள் வேறு விடயங்களை கதைத்து, தங்கள் மனதை புண்படுத்தும் விதமாக நடந்துகொள்வதாக தெரிவிக்கும் கிளிநொச்சி பன்னங்கண்டி மக்கள், மக்களுக்குள் முரண்பாடுகளை ஏற்படுத்த வேண்டாமென தெரிவித்துள்ளனர்.

மலையத்திலிருந்து இடம்பெயர்ந்த இம் மக்கள் சுமார் 27 வருடங்களாக பன்னங்கண்டி பிரதேசத்தில் வசித்து வருகின்றனர். இவர்களுள் சிவா பசுபதி கிராம மக்களுக்கு காணிகளை வழங்குவதாக உரிமையாளர் குறிப்பிட்டுள்ள நிலையில், தற்போது சரஸ்வதி கிராமம் மற்றும் ஜொனி குடியிருப்பு மக்கள் கடந்த ஏழு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் இன்று (செவ்வாய்க்கிழமை) சென்று சந்தித்துள்ளார். இதனைத் தொடர்ந்தே இப்பிரதேச மக்கள் ஊடகங்களிடம் மேற்குறித்தவாறு தெரிவித்தனர்.

காணி உரிமையாளர்களை அழைத்து இக் காணிகளுக்கான உறுதிகளை தமக்கு பெற்றுத்தர வேண்டுமென கேட்டுக்கொண்ட இம் மக்கள், அரசாங்கத்தின் எவ்வித உதவிகளும் தமக்கு கிடைப்பதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg