Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

லண்டன் தாக்குதலாளியின் மனைவி ஆழ்ந்த வருத்தத்தை வெளியிட்டுள்ளார்.

In
Updated: 11:51 GMT, Mar 28, 2017 | Published: 11:34 GMT, Mar 28, 2017 |
0 Comments
1078
icon_com
This post was written by : elayathambi
_95348441_masood-index

லண்டன் வெஸ்ட்மினிஸ்டரில் தாக்குதல் மேற்கொண்ட காலித் மசூத்தின் மனைவி, தனது கணவரின் தாக்குதலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். கடந்த புதன் கிழமை மசூத்தால் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டு பலர் காயமுற்றிருந்தனர்.

மசூத்தின் மனைவி ரொஹி ஹிதாரா இன்று பொலிசார் மூலம் வெளியிட்டுள்ள செய்தியில் இத் தாக்குதலால் உயிரிழந்தவர்களுக்கும் காயமுற்றவர்களுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபத்தையும் கவலையையும் தெரிவித்துள்ளார்.

இந்த இக்கட்டான சூழலில் தனது குடும்பத்தின்; மிகக் குறிப்பாக தனது பிள்ளைகளின் பிரத்தியேக வாழ்வு குறித்தும் பாதுகாப்புக் குறித்தும் கவனம் கொள்ள வேண்டும் என்ற வேண்டுதல் ஒன்றையும் அவர் முன் வைத்துள்ளார்.

மர்ட்சூத்தின் தாயான ஜெனத் அஜோ நேற்று வெளியிட்ட செய்தியை அடுத்து இச்செய்தி அவரின் மனைவி மூலம் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தனது மகனின் பயங்கரவாதச் செயலால் பாதிப்புற்றவர்கள் குறித்து தான் கண்ணீர் வடிப்பதாக நேற்றைய செய்தியில் ஜெனத் அஜோ தெரிவித்திருந்தார்.

தாக்குதலை மேற்கொண்ட காலித் மசூத் மூன்று பிள்ளைகளின் தந்தை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரொஹி ஹிதாராவிற்கு முன்னர் மற்றுமொருவரையும் மர்சூத் மணம் முடித்திருந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

 

_95290648_mediaitem95290647
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg