Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மன்னாரிலும் வேலையற்ற பட்டதாரிகள் போராட்டத்தில் குதித்தனர்

In இலங்கை
Published: 12:49 GMT, Mar 28, 2017 |
0 Comments
1153
icon_com
This post was written by : Vithushagan
unnamed (12)

மன்னார் மாவட்டத்தில் உள்ள வேலையில்லா பட்டதாரிகள் ஒன்றிணைந்து இன்று (செவ்வாய்க்கிழமை) கவனயீர்ப்பு பேரணி ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

மன்னார் மாவட்ட வேலையில்லா பட்டதாரிகள் சமூகத்தின் ஏற்பாட்டில் குறித்த கவனவயீர்ப்பு பேரணி இடம் பெற்றது.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக இன்று காலை 10.30 மணியளவில் ஆரம்பமான குறித்த பேரணி பிரதான வீதியூடாக சென்று மன்னார் மாவட்டச் செயலகத்தை சென்றடைந்தது.

இதன் போது பேரணியில் கலந்து கொண்ட பட்டதாரிகள் பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு பேரணியில் கலந்து கொண்டனர்.

பின்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் ஒன்றுகூடிய பட்டதாரிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கோஷமெழுப்பினர். பட்டதாரிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், வடக்கு மாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் ஆகியோர் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

பின்னர் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரியவிடம் பட்டதாரிகள் தமது கோரிக்கை அடங்கிய மகஜரை கையளித்தனர். அத்தோடு, போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் ஆகியோருக்கும் மகஜர் கையளிக்கப்பட்டது.

unnamed (10) unnamed (12) unnamed

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg