Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இரண்டாவது கருத்துக்கணிப்பு நடத்தப்படுவது தொடர்பில் இன்று விவாதத்துடன் கூடிய வாக்கெடுப்பு

In
Updated: 12:45 GMT, Mar 28, 2017 | Published: 12:13 GMT, Mar 28, 2017 |
0 Comments
1319
icon_com
This post was written by : Sylviya
13

இரண்டாவது கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்துவது தொடர்பில் ஸ்கொட்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று (செவ்வாய்கிழமை) விவாதிக்கவுள்ளனர் எனவும் அது தொடர்பில் வாக்களிக்கவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெஸ்மின்ஸ்டர் தாக்குதல் நடைபெற்றமையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குறித்த விவாதம், இன்று ஆரம்பிக்கப்படவுள்ளமை பெரும்பாலானோரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இரண்டாவது கருத்துக்கணிப்பு நடத்தப்படுவதற்கு ஸ்கொட்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் எனவே ஸ்கொட்லாந்து முதலமைச்சர் நிக்கோலா கோரியுள்ளார்.

இருப்பினும், ஸ்கொட்லாந்தின் கோரிக்கை ஏற்கப்படாது என நேற்று (திங்கட்கிழமை) பிரதமர் மே தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று நடைபெறவுள்ள வாக்கெடுப்பில், பெரும்பான்மையானோர் இரண்டாவது கருத்துக்கணிப்பிற்கு ஆதரவளிக்கும் பட்சத்தில், குறித்த கருத்துக்கணிப்பு எவ்வாறு மேற்கொள்ளப்படும் என்பதை விளக்கி பிரித்தானிய நாடாளுமன்றிற்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg