Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரெக்சிற் தேர்வுக் குழுவின் கூட்டத்திலிருந்து அமைதியாக வெளியேறினர்

In
Published: 12:42 GMT, Mar 28, 2017 |
0 Comments
1249
icon_com
This post was written by : Sylviya
14

பிரெக்சிற் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், பிரெக்சிற் தேர்வுக் குழுவால் பிரத்தியேகமாக நடத்தப்பட்ட கூட்டம் ஒன்றிலிருந்து அமைதியாக வெளியேறியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரெக்சிற் தொடர்பில் முன்வைக்கப்பட்டிருந்த 155 பக்கங்களை கொண்ட தொகுப்பை ஏற்குமாறு தொழிற்கட்சியைச் சேர்ந்த ஹிலரி பென் (Hilary Benn) தெரிவித்ததாக அண்மையில் வெளியாகிய தகவல்கள் குறிப்பிடுகின்றன.

குறித்த தொகுப்பில் முன்வைக்கப்பட்டிருந்த விடயங்கள் திருப்தியடையக் கூடிய வகையில் இருக்கவில்லை என சர்வதேச ஊடகம் ஒன்று கருத்து வெளியிட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் பிரெக்சிற் தேர்வுக் குழுவின் செய்தித் தொடர்பாளர் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்துடனான பேச்சுவார்த்தையின் போது பிரித்தானிய அரசாங்கத்தால் கருத்திற்கொள்ளப்பட வேண்டிய இலக்குகளே குறித்த தொகுப்பில் உள்ளடங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg