Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒரே பார்வையில் இன்றைய உலகச் செய்திகள்

In
Published: 15:58 GMT, Mar 28, 2017 |
0 Comments
1068
icon_com
This post was written by : Sivaguru Siva
_95351663_mediaitem95351662

பிரெஞ்சு காவல்துறையால் பரிஸ் நகரில் 56 வயதான சீனர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர் இடம்பெற்ற வன்முறைகளில் மூன்று காவல்;துறையினர் காயமடைந்துள்ளனர். இந்த வன்முறைகள் தொடர்பாக 35 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி நபர் வசித்த அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்குள் காவல்துறையினர் பிரவேசித்தபோது அவர் கூரிய ஆயுதம் ஒன்றால் காவற்துறையினர் மீது தாக்குதல் நடத்த முனைந்தபோது சுட்டுக்கொல்ப்பட்டதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

ஆனால் இதனை கொல்லப்பட்டவரின் குடும்பத்தினர் மறுக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக சீனாவும் பிரான்சிடம் அதிகாரபூர்வமாக முறையிட்டதுடன் தமது பிரஜைகளை பாதுகாக்கும்படி கோரியுள்ளது.

Ului

ஓஸ்ரேலியாவில் இன்று வீசிய மோசமான புயல் மற்றும் கடும் மழையால் அதன் வடகிழக்கு கரையில் பெரும் அழிவுகள் ஏற்பட்டுள்;ளன. மணிக்கு 263 கிலோமீற்றர் வேகத்தில் வீசிய இந்தப்புயலால் இதுவரை ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

பல பகுதிகளில் மின்சாரத்தடை ஏற்பட்டுள்ளதால் பல்லாயிரக்கணக்கான வீடுகளுக்கு மின் வினியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.

புயலால் பாதிக்கப்பட்ட குயின்ஸ்லாந்து பகுதியில் மீட்புப்பணிகளை மேற்கொள்வதற்காக கடற்படைக்கலங்களும் உலங்கு வானூர்திகளும் அனுப்பப் பட்டுள்ளன

_95354667_mediaitem95354666

பிரித்தானியா தனது அண்மைக்கால வரலாற்றில்  மிக முக்கியமான தருணம் ஒன்றை எதிர் நோக்குவதாக தலைமையமைச்சர் திரேசா மே இன்று குறி;ப்பிட்டுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கு ஏதுவான முறையில் பிரெக்ஸிற்றின் முதலாவது அதிகாரபூர்வ நகர்வை நாளை மேற்;கொள்ள முன்னர் திரேசா மே இந்தக்கருத்தை தெரிவித்துள்ளார்.

பிரெக்ஸிற்றுக்குப் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஆழமானதும் சிறப்பானதுமான உறவை கொண்டிருப்பதே தனது இலக்கு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

_95353318_038711759-1

ஜேர்மனியில் வசிக்கும் நூற்றுக்கணக்கான துருக்கியர்களை துருக்கியபுலனாய்வுத்துறை உளவு பார்த்த விடயம் பகிரங்கமாகியுள்ளது.

துருக்கிய அரசதலைவர் எர்டோகனின் எதிர்ப்பாளர்களே இவ்வாறு உளவு  பார்க்கப்பட்டதாக ஜேர்மனிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

துருக்கியில் அரசதலைவர் எர்டோகனுக்கு மேலதிக அதிகாரங்களை வழங்குவதற்கு அங்கீகாரம்கோரும் குடியொப்ப வாக்கெடுப்பு ஒன்று எதிர்வரும் ஏப்ரல் 16 திகதியன்று இடம்பெறவுள்ளது

எனினும் ஜேர்மனி உட்பட்ட 6 ஐரோப்பிய நாடுகளில் வகிக்கும் புலம்பெயர் துருக்கியர்கள் மத்தியில் இந்த வாக்கெடுப்பு ஏற்கனவே ஆரம்பிக்கபட்டுள்ளமை குறி;ப்பிடத்தக்கது.

measles

ஐரோப்பாவில் பரவலாக சின்னமுத்து நோய் பரவிவருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

இத்தாலி மற்றும் ரொமானியா ஆகிய நாடுகளில் அதிக அளவில் சின்னமுத்து நோய் பரவல் அவதானிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ள உலக சுகாதார அமைப்பு

இந்த ஆண்டின் ஜனவரி மாதத்திலிருந்து இந்த இரண்டுநாடுகளிலும் மொத்தம் 3400 சின்னமுத்து நோயாளிகள் இனங்காணப்பட்டதாகவும் இதில் 17 மரணங்களும் பதிவானதாகவும் குறிப்பிடுகின்றது.

சின்னமுத்து நோயை தடுப்பதற்கு தடுப்புமருந்தேற்றல் அவசியமானதெனவும் உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg