Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை ரசிகர்களுக்கு கவலையை ஏற்படுத்திய மழை

In விளையாட்டு
Published: 17:27 GMT, Mar 28, 2017 |
0 Comments
1092
icon_com
This post was written by : Vithushagan
260841.3

இலங்கைக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான 2ஆவது ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.

இந்த போட்டியில் இலங்கை அணி துடுப்பெடுத்தாடியதன் பிறகு பெய்த கடும் மழையின் காரணமாக இரவு 8.45 மணியளவில் போட்டி இடைநிறுத்தப்பட்டது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற   இலங்கை அணிக்கு, இளம் வீரர் குசல் மெண்டிஸ் மற்றும் தரங்க ஆகியோர் மிக சிறந்த இணைப்பாட்டத்தை வெளிப்படுத்தினர்.

இளம் வீரர் குசல் மெண்டிஸ் தனது கன்னி சதத்தை பெற்றார். தனது 200 வது ஒருநாள் போட்டியில் விளையாடும் அணித்தலைவர் தரங்க 65 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க இலங்கை அணி 49.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 311 ஓட்டங்கள் எடுத்தது.

இறுதி ஓவரை வீசிய பங்களாதேஷ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தஸ்கின் அகம்மட் இறுதி ஓவரில் அடுத்தடுத்து 3 விக்கெட்டுக்களை கைப்பற்றி ஹாட்ரிக் சாதனை படைத்திருந்தார்.

கடந்த போட்டியில் தோல்வியை தழுவிய இலங்கை அணிக்கு இன்றைய போட்டியில் வெற்றிபெறுவது முக்கியமானதாக இருந்த நிலையில் மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டுள்ளது.

3ஆவதும் இறுதியுமான போட்டி எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி கொழும்பு SSC மைதானத்தில் பகல் ஆட்டமாக இடம்பெறவுள்ளது

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்களாதேஷ் அணி 1-0 என முன்னிலை வகிப்பதுடன், இலங்கை அணி தொடரை சமனிலை செய்வதற்கு அடுத்த போட்டியில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg