Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை மீது சர்வதேசம் முழு நம்பிக்கை வைத்துள்ளது: மங்கள சமரவீர

In இலங்கை
Updated: 04:32 GMT, Mar 29, 2017 | Published: 02:34 GMT, Mar 29, 2017 |
0 Comments
1287
This post was written by : Ravivarman

இரண்டு பிரதான கட்சிகள் இணைந்து புதிய இலங்கையை உருவாக்கும் அரசாங்கத்தின் நல்லாட்சி காரணமாக சர்வதேச நாடுகளின் நன்மதிப்பை இலங்கை பெற்றுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

வெளி நாட்டலுவல்கள் அமைச்சில் நேற்றையதினம் (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனை தெரிவித்தார். இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,

“நீதியான, நம்பகமான நீதி விசாரணைப் பொறிமுறையொன்றை உறுதிப்படுத்துவதே எமது நோக்கமாகும். சகல தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பொறிமுறையொன்று உருவாக்கப்படும். குறிப்பாக பாதிக்கப்பட்ட எமது நாட்டு சகோதர இனத்தவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம்.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பரிந்துரைகளை முன்வைத்திருந்தாலும், இறுதியில் அவைபற்றிய தீர்மானங்களை எடுப்பது அரசாங்கமே. நாட்டின் இறைமைக்குள் ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயங்களுக்கு அமைய தீர்மானம் எடுக்கப்படும்.

நாட்டின் தற்போதைய தலைமைத்துவம் மற்றும் கொள்கைகள் தொடர்பில் ஏற்பட்டுள்ள நம்பிக்கை காரணமாக இலங்கை உலக நாடுகளின் நன்மதிப்பை வென்றுள்ளது” என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg