Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மெஸ்ஸிக்கு சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கு தடை

In உதைப்பந்தாட்டம்
Updated: 04:33 GMT, Mar 29, 2017 | Published: 03:21 GMT, Mar 29, 2017 |
0 Comments
1591
icon_com
This post was written by : Risha
messi

நடுவரை அவமதிக்கும் வகையில் பேசியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பார்சிலோனா வீரர் லயனல் மெஸ்ஸிக்கு, உலகக் கிண்ண தகுதிச்சுற்றின் நான்கு போட்டிகளில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற சிலியுடனான தகுதிச்சுற்று போட்டியின்போது, போட்டியின் துணை நடுவர், மெஸ்ஸிக்கு எதிராக தீர்ப்பு கூறியதும் அவரைநோக்கி மெஸ்ஸி ஆவேசமடைந்து கத்தியுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பிலேயே இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் ஃபிபாவின் ஒழுங்குமுறை ஆணையம் விசாரணை நடத்தியது. விசாரணையின் நிறைவில் மெஸ்ஸிக்கு 4 சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டதுடன், 10 ஆயிரம் டொலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இத்தடையின் பிரகாரம் மெஸ்ஸிக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வரை போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தடையை எதிர்த்து மெஸ்ஸியும், ஆர்ஜென்டின கால்பந்து சங்கமும் முறையீடு செய்ய உள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg