Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐ.பி.எல்.: கோஹ்லியின் தலைமைத்துவமின்றி களமிறங்கவுள்ள ரோயல் செலஞ்சர்ஸ்

In கிாிக்கட்
Updated: 04:34 GMT, Mar 29, 2017 | Published: 03:55 GMT, Mar 29, 2017 |
0 Comments
2244
icon_com
This post was written by : Risha
virat-kohli (1)

இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில், ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணித்தலைவர் விராட் கோஹ்லி இன்றி போட்டியை ஆரம்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவுஸ்ரேலியாவுடனான டெஸ்ட் போட்டியின் போது தோள்பட்டையில் காயமடைந்த கோஹ்லி, இன்னும் பூரண குணமடையாத நிலையில் ஐ.பி.எல். ஆரம்ப போட்டிகளில் விளையாடுவது சந்தேகம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐ.பி.எல். போட்டிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி ஆரம்பமாகின்றன. விராட் கோஹ்லியின் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, முதல் போட்டியில் நடப்பு சம்பியனான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதவுள்ளது.

நூறு சதவீதம் உடற்தகுதியுடன் இருந்தால் மட்டுமே விளையாடுவேன் என சில வாரங்களுக்கு முன் கோஹ்லி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg