Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய வீரர்களுக்கு ஊக்கத்தொகை

In கிாிக்கட்
Updated: 06:41 GMT, Mar 29, 2017 | Published: 04:19 GMT, Mar 29, 2017 |
0 Comments
1213
icon_com
This post was written by : Risha
Innnn

அவுஸ்ரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 எனக் கைப்பற்றிய இந்திய வீரர்களுக்கு தலா 50 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அறிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் நிர்வாகிகள் குழுவினர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆகியோரினாலேயே இந்த ஊக்கத்தொகை வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பி.சி.சி.ஐ.-இன் திட்டத்தின்படி அணி வீரர்களுக்கு மாத்திரமன்றி, அணியின் பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவிற்கு 25 லட்சமும், உதவி ஊழியர்களுக்கு தலா 15 லட்சமும் ஊக்கத் தொகையாக வழங்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இவ்வாறான சன்மானங்களை வழங்குவது குறித்த தீர்மானங்கள் பொதுக் கூட்டங்களின் போதே மேற்கொள்ள வேண்டும் என பி.சி.சி.ஐ. பொருளாளர் அனிருத் சவுத்ரி இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஆனால், இன்று வென்ற போட்டிக்கு மூன்று வாரங்களின் பின்னர் சன்மானம் அறிவிப்பதானது முறையாக இருக்காது என தெரிவித்து ஊக்கத் தொகை வழங்கப்படுமென நிர்வாகிகள் குழு உறுப்பினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg