Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரதமர் மோடியுடனான சந்திப்பை எதிர்பார்த்திருக்கும் ட்ரம்ப்

In இந்தியா
Updated: 04:37 GMT, Mar 29, 2017 | Published: 04:15 GMT, Mar 29, 2017 |
0 Comments
1234
icon_com
This post was written by : Elakkiya
trump-modi-1481283692

நடப்பாண்டின் இறுதிப் பகுதியில் வொஷிங்டனுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்திப்பார் என்று வெள்ளை மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது.

இன்று (புதன்கிழமை) வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், பிரதமர் மோடியின் வொஷிங்டன் விஜயத்தை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பிரதமர் மோடியின் பொருளாதார சீர்திருத்த திட்டங்களுக்கான ஆதரவினை ட்ரம்ப் தெரிவித்துள்ளதுடன் இந்திய மக்கள் மீதான தனது மரியாதையை வெளிப்படுத்தியுள்ளதாகவும்குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, உலகம் முழுவதிலுமான சவால்களை சமாளிப்பதில் அமெரிக்காவுக்கு இந்தியா உண்மையான நண்பனாக கருதப்படுவதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளதாகவும் மேற்படி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg