Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒபாமாவின் காலநிலை மாற்றக் கொள்கைகளை ரத்து செய்தார் ட்ரம்ப்

In
Published: 04:42 GMT, Mar 29, 2017 |
0 Comments
1259
icon_com
This post was written by : Sylviya

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவினால் வகுக்கப்பட்ட காலநிலை மாற்றக் கொள்கைகளை ரத்து செய்யும் வகையிலான செயற்குழு ஆணைப்பத்திரமொன்றில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கைச்சாத்திட்டுள்ளார்.

குறித்த செயற்குழு ஆணைப்பத்திரம் நேற்று (செவ்வாய்க்கிழமை) கைச்சாத்திடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒபாமாவின் கொள்கைகள் ரத்து செய்யப்படுவதன் மூலம் நிலக்கரி மீதான போர் முடிவுக்கு கொண்டுவரப்படும் எனவும் வேலை தொடர்பான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ட்ரம்பின் இந்த நடடிக்கையின்  பிரகாரம், ஒபாமாவினால் முன்வைக்கப்பட்ட பல கொள்கைகள் ரத்து செய்யப்படுவதுடன் படிம எரிபொருள் தொடர்பான விடயங்கள் ஊக்குவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரம்பின் குறித்த நடவடிக்கைளை வணிக குழுக்கள் வரவேற்றுள்ள போதிலும், சுற்றுச்சூழல் தொடர்பில் பிரசாரம் செய்யும்  குழுக்கள் அவற்றிற்கு  கண்டனம் தெரிவித்துள்ளன.

அத்துடன், ட்ரம்பின் இந்த நடவடிக்கைக்கு  எதிர்ப்பு தெரிவிக்கும் பொருட்டு பல நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் வெள்ளை மாளிகையின் முன்றலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg