Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நல்லாட்சி அரசின் வீண் விரயமே அம்பாந்தோட்டை துறைமுகம் விற்கப்படுவதற்கு காரணம்: பந்துல

In இலங்கை
Updated: 08:49 GMT, Mar 29, 2017 | Published: 05:16 GMT, Mar 29, 2017 |
0 Comments
1183
icon_com
This post was written by : Ravivarman
bandulla_guna-e1356200632969-720x480

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் நான்காயிரத்து 300 மில்லியன் ரூபா நிதி விரயமாக்கப்பட்டுள்ளது. அந்நிதி வீண் விரயமாக்கப்படாதிருந்தால் அம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

கூட்டு எதிரணியினர் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்றையதினம் (செவ்வாய்க்கிழமை) கொழும்பிலுள்ள ஸ்ரீவஜிராஷர்ம பௌத்த நிலையத்தில் நடைபெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் வீண்விரயமாக்கப்பட்ட குறித்த தொகைப்பணத்தினை உரிய நடைமுறைகளுடன் அபிவிருத்தித் திட்டங்களுக்குப் பயன்படுத்தியிருந்தால் இந்த இழப்பு ஏற்பட்டிருக்காது. எனவே இதற்கு இந்த நல்லாட்சி அரசாங்கமே பொறுப்புக் கூறவேண்டும் என பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார்.

அண்மையில் 400 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியினை இவ்வருடத்தில் ஈட்ட வேண்டியுள்ளதால் அம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்பனை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்த கருத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன மேற்படி பதிலளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg