Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டெபீ சூறாவளியால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்

In உலகம்
Published: 05:06 GMT, Mar 29, 2017 |
0 Comments
1292
icon_com
This post was written by : Sylviya

அவுஸ்ரேலியாவை தாக்கியுள்ள டெபீ சூறாவளியால் சுமார் 1300 கிலோமீற்றர் வரையான வடகிழக்கு கடற்பகுதி வெள்ளத்தால் பாதிக்கப்படலாம் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

டெபீ சூறாவளியால் பல்லாயிரக்கணக்கான மக்கள் மின்சார வசதியின்றி பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

இந்த நிலைமையை தொடர்ந்து அவுஸ்ரேலிய பிரதமர் மல்கம் டர்ன்புல் (Malcolm Turnbull), பேரழிவுகளுக்கு முகங்கொடுக்கும் வகையிலான திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.

இது இவ்வாறிருக்க, இன்று (புதன்கிழமை) 250 மி.மீ வரையான மழைவீழ்ச்சி பதியக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணங்கள் மேற்கொள்வதை தவிர்த்து பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg