Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜெயா மரணத்தில் ஒன்றாக இருந்தவர்கள் இன்று பிரிந்து நிற்கின்றனர்: ஸ்டாலின்

In இந்தியா
Updated: 06:21 GMT, Mar 29, 2017 | Published: 05:55 GMT, Mar 29, 2017 |
0 Comments
1159
icon_com
This post was written by : Elakkiya
Daily_News_3897930383683

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தின்போது ஓரணியில் ஒன்றாக நின்றவர்கள் இன்று ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் இரண்டு அணிகளாக போட்டியிடுகின்றனர் என தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளன. இந்நிலையில் ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிடும் மதுகணேஷை ஆதரித்து புது வண்ணாரப் பேட்டையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் ஸ்டாலின் மேற்படி தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஸ்டாலின், “அ.தி.மு.க. இரண்டாக பிரிந்து இரண்டு அணியாக நிற்கிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தின்போது ஒன்றாக இருந்தவர்கள், ஓரணியாக இருந்தவர்கள், கோடிகோடியாக கொள்ளை அடித்தவர்கள், தமிழகத்தை குட்டிச்சுவராக்கியவர்கள் இப்போது பிரிந்து நிற்கிறார்கள். ஒரு அணி பெரா மாபியா அணியாகவும், மணல் மாபியா சேகர் ரெட்டி இன்னொரு அணியாகவும் மக்களை ஏமாற்ற இந்த தொகுதியில் வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். இத்தொகுதி மக்களாகிய நீங்கள், இந்த இரு மாபியாக்களை கண்டு ஏமாறமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

நாம் ஜெயலலிதாவை எதிர்த்தோம். ஆனால், எந்த சூழ்நிலையிலும் நாங்கள் அவருக்கு துரோகம் செய்யவில்லை. துரோகம் செய்தது யார் என்பதை அவர்களே இன்று அடையாளம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாடு இன்று ஸ்தம்பித்து கிடக்கின்றது என்றால் அதற்கு காரணம் ஓ.பன்னீர்செல்வம்தான்.

எதிர்வரும் ஏப்ரல் 12ஆம் திகதி உதயசூரியன் மிகவும் பிரகாசமாக உதிக்கப்போகிறது என்பதை இந்தக் கூட்டம் உறுதியாக கூறுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg