Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாகிஸ்தானுடனான தொடரை நடத்த அரசாங்கத்திடம் அனுமதி கோரியுள்ள பி.சி.சி.ஐ.

In கிாிக்கட்
Updated: 06:32 GMT, Mar 29, 2017 | Published: 06:08 GMT, Mar 29, 2017 |
0 Comments
1110
icon_com
This post was written by : Risha
bcci

இந்திய கிரிக்கெட் சபைக்கு அரசாங்கம் அனுமதியளித்தால், துபாயில் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரை நடத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தானுடனான போட்டியை நடத்துவதற்கு அனுமதி கோரி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை உள்துறை அமைச்சிற்கு கடிதம் அனுப்பியுள்ளது.

பாகிஸ்தானுடன் குறுகிய காலத் தொடரொன்றை நடத்துவதற்கு அனுமதி வழங்குமாறு ஏற்கனவே இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவராக சஷாங் மனோகர் செயற்பட்ட காலத்திலும் அனுமதி கோரப்பட்டது.

ஆனால், இந்திய மண்ணில் தொடர்ந்துவந்த தீவிரவாதத் தாக்குதல்கள் மற்றும் இரு நாடுகளிடையே நிலவிய பதற்றமான சூழ்நிலை என்பவற்றை சுட்டிக்காட்டி அரசாங்கம் அனுமதி வழங்க மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg