Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

திடீரென பரவிய தீ காரணமாக பெருவின் விமானம் அவசர தரையிறக்கம்

In உலகம்
Published: 06:12 GMT, Mar 29, 2017 |
0 Comments
1188
icon_com
This post was written by : Sylviya

பெரு நாட்டிற்கு சொந்தமான வணிக விமானம் ஒன்று தீப்பிடித்து எரிய ஆரம்பித்ததைத் தொடர்ந்து, அவசரமாக தரையிறக்கப்பட்டது.

குறித்த சம்பவம் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றதாகவும், குறித்த விமானம் தென் அமெரிக்காவின் அன்டீஸ் பகுதியில் உள்ள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விமானம் பெரு தலைநகர் லீமாவில் இருந்து புறப்பட்டதைத் தொடர்ந்து தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதனையடுத்து அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டதன் பின்னர் ஜாவுஜா விமான நிலையத்தில் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் செய்தி வெளியிட்டிருந்த உள்ளூர் ஊடகம் ஒன்று, குறித்த விமானத்தின் வலதுபுற இறக்கை உடைந்ததாக தெரிவித்துள்ளது. அத்தோடு, விமானத்தில் பயணித்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத் திடீர் தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் தொடர்பில் தற்போது தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg