Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ட்ரம்பின் பயணத் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து நியூயோர்க்கில் ஆர்ப்பாட்டம்

In
Published: 06:56 GMT, Mar 29, 2017 |
0 Comments
1251
icon_com
This post was written by : Sylviya

குடியேற்ற, மத மற்றும் மனிதாபிமான விடயங்கள் சார்ந்த அமைப்புக்கள் ஒன்றிணைந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் விதிக்கப்பட்ட பயணத் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து நியூயோர்க்கில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளன.

லோவர் மன்ஹாட்டன் பகுதியில் அமைந்துள்ள ட்ரம்பின் கட்டிடத்திற்கு முன்பாகவே குறித்த ஆர்ப்பாட்டம் நேற்று (செவ்வாய்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அகதிகள் தொடர்பான ஓவியங்கள், றப்பர் படகுகள், மற்றும் கடற்பயணத்தின் போது அபாயத்தை விளைவிக்கக் கூடிய பொருட்கள் என்பன குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டக்காரர்களால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

குறித்த ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கமைத்தவர் இது தொடர்பில் கருத்து தெரிவித்த போது, “அகதிகள் மற்றும் குடியேற்றவாசிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதே எமது விருப்பம். இந்த நாட்டிற்கு வந்த அவர்கள் அமைதியான வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும். அவர்களது சொந்த நாட்டில் கிடைக்காது போன அமைதியான வாழ்க்கையை அவர்கள் இங்கு அனுபவிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த மற்றொரு ஆர்ப்பாட்டக்காரர், “குடியேற்றவாசிகள் மற்றும் அகதிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் டரம்ப் மற்றும் அவரது நிர்வாகக் குழுவின் முறையற்ற நடவடிக்கைகளுக்கு  எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலுமே நான் இங்கு வந்துள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg