Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரான்ஸ் – இந்தோனேசிய ஜனாதிபதிகளுக்கிடையே பேச்சுவார்த்தை

In ஐரோப்பா
Updated: 07:12 GMT, Mar 29, 2017 | Published: 07:12 GMT, Mar 29, 2017 |
0 Comments
1327
This post was written by : Sylviya

பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்சுவா ஹோலன்ட் (Francois Hollande) இன்று (புதன்கிழமை) இந்தோனேசிய ஜனாதிபதி ஜொகோ விடோடோவை (Joko Widodo) நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்த பேச்சுவார்த்தை இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரான்சுவாவின் தென்கிழக்காசிய சுற்றுப்பயணத்தின் ஒரு அங்கமாகவே குறித்த விஜயம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுமார் 30 ஆண்டுகளுக்கு பின்னர் பிரான்ஸ் ஜனாதிபதியொருவர் இந்தோனேசியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருப்பது இதுவே முதல் முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு தலைவர்களுக்கும் இடையிலான குறித்த பேச்சுவார்த்தையின் போது பிரான்ஸ் மற்றும் இந்தோனேசியாவுக்கு இடையில் உள்ள உறவுகளை வலுப்படுத்தும் வகையில் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது என இது தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ள இந்தோனேசிய ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg