Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழக விவசாயிகளுக்கு தொல். திருமாவளவன் நேரில் ஆதரவு

In இந்தியா
Updated: 07:53 GMT, Mar 29, 2017 | Published: 07:53 GMT, Mar 29, 2017 |
0 Comments
1125
icon_com
This post was written by : Elakkiya
thol

டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழக விவசாயிகளுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், வறட்சி நிவாரணம், விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டெல்லியில் இன்று 16 ஆவது நாளாகவும் தமிழக விவசாயிகள் அறவழிப் போராட்டங்களை நடத்திவருகின்றனர்.

இந்நிலையில், இன்று (புதன்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் நேரில் சென்று கலந்துரையாடிய திருமாவளவன் விவசாயிகளின் ஒரு கோரிக்கையைகூட நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு முன்வரவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், ‘மத்திய அமைச்சர்களை சந்தித்து முறையிட்டும் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசு முன்வரவில்லை. தமிழகத்தை இவ்வாறு மாற்றான்தாய் மனப்பான்மையுடன் மத்தியஅரசு நடத்துவது மனவேதனை அளிப்பதாகவும்’ திருமாவளவன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg