Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கடலில் இறங்கி போராட்டம் நடத்திய மாணவர்களால் மெரீனாவில் பரபரப்பு

In இந்தியா
Published: 08:52 GMT, Mar 29, 2017 |
0 Comments
1161
icon_com
This post was written by : Elakkiya

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், வறட்சி நிவாரணம், விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டெல்லியில் தொடர் அறவழிப்போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை மெரீனாவில் மாணவர்கள் களமிறங்கியுள்ளனர்.

பொலிஸ் கண்காணிப்புக்களையும் மீறி மாணவர்கள் கடலில் இறங்கி போராட்டம் நடத்த முயற்சித்ததால் குறித்த பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன் மெரீனாவில் அதிகளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

விவசாயிகளை பாதுகாப்போம், தண்ணீரை பாதுகாப்போம் என்று முழக்கமிட்டவாறு மாணவர்கள் கடலில் இறங்கி போராட்டம் நடத்தியதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பொலிஸாரால் கரைக்கு இழுத்துவரப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், விவசாயிகளுக்கு ஆதரவான தமது போராட்டம் மேலும் வலுப்பெறும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், விவசாயிகளுக்கு ஆதரவாக கோவையில் போராட்டம் நடத்திய 20 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

merina
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg