Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காணாமல் போனவர்கள் விடயத்தில் அலட்சியம் வேண்டாம்: வடமராட்சி கிறிஸ்தவ ஒன்றியம்

In இலங்கை
Published: 08:15 GMT, Mar 29, 2017 |
0 Comments
1169
icon_com
This post was written by : Varshini

காணாமல் போனவர்களது உறவினர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்மானமொன்றை அரசாங்கம் வழங்கவேண்டுமென வடமராட்சி கிறிஸ்தவ ஒன்றியம் தெரிவித்துள்ளது.

கிளிநொச்சி கந்தசுவாமி கோயில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் இன்று 38ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இன்றைய தினம் (புதன்கிழமை) போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வடமராட்சி கிறிஸ்தவ ஒன்றியம் சென்று ஆதரவு வழங்கியதோடு, ஒன்றியத்தின் உறுப்பினரான அருட்தந்தை ஏ.ஜே.ஜாவித் இவ்வாறு குறிப்பிட்டார்.

மக்களின் நியாயமான கோரிக்கைகளை அலட்சியப்படுத்த வேண்டாம் எனக் குறிப்பிட்ட அவர், யுத்தப் பாதிப்புகளை எதிர்கொண்ட இம் மக்கள் சுமூகமாக வாழ்வதற்கான வழியை, நாட்டின் தலைவர்களும் நல்லிணக்கத்திற்காக போராடும் அமைப்புகளும் முன்னெடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை, போர்க்குற்றங்களுக்கு நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதில் அனைவரும் ஒன்றுசேர்வது அவசியம் என்றும் குறிப்பிட்டார்.

vadamaratchi christian association meets kili.missing person's relations (2) vadamaratchi christian association meets kili.missing person's relations (3) vadamaratchi christian association meets kili.missing person's relations (1)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg