Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

லண்டன் மற்றும் பரிஸ் மேயர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை

In ஐரோப்பா
Published: 08:29 GMT, Mar 29, 2017 |
0 Comments
1253
icon_com
This post was written by : Sylviya

லண்டன் மேயர் சாதிக் கான், பரிஸ் மேயர் ஆன் ஹிடல்கோவை (Anne Hidalgo) பிரான்ஸ் தலைநகர் பரிஸில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

குறித்த பேச்சுவார்த்தை நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரெக்சிற் பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ள நிலையில் பிரித்தானியாவுக்கான ஆதரவு மற்றும் ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பில் லண்டன் மேயருடன் ஆன் ஹிடல்கோ பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த இரு நகர மேயர்களும் பல புதிய செயற்திட்டங்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பிலும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த பரிஸ் மேயர், “சாதிக் கான் மிகுந்த நற்பண்புடையவர். அவர் சிறந்த தலைவரும் கூட. பிரித்தானிய தலைவராக இருப்பினும் அவர் ஒரு ஐரோப்பியர். பிரெக்சிற் தொடர்பில் நாம் சிறந்த ஒத்துழைப்பை நல்குவோம்” என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இன்று (புதன்கிழமை) பிரான்ஸ் ஜனாதிபதி வேட்பாளர் இமானுவேல் மக்ரனை (Emmanuel Macron), சாதிக் கான் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg