Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புதிய தொலைக்காட்சி சேவையை ஆரம்பிக்க பன்னீர்செல்வம் அணியினர் தீர்மானம்

In இந்தியா
Updated: 09:41 GMT, Mar 29, 2017 | Published: 09:39 GMT, Mar 29, 2017 |
0 Comments
1495
icon_com
This post was written by : Elakkiya
201703291243599569_OPS-On-behalf-of-the-teamComing-Soon-AMMA-TV_SECVPF

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க புரட்சித்தலைவி அம்மா அணி புதிய தொலைக்காட்சி சேவை ஒன்றை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளது.

‘அம்மா டி.வி’ என்ற பெயரில் 24 மணிநேர தொலைக்காட்சி சேவையாக வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக நுங்கம்பாக்கத்தில் இடம் தேர்வு செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதுகுறித்து பன்னீர்செல்வம் அணியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவிக்கையில், ‘சிறிய கட்சிகள் எல்லாம் தொலைக்காட்சி சேவையினை நடத்தும்போது நாம் ஏன் தொலைக்காட்சி சேவையை ஆரம்பிக்கக் கூடாது’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் ‘அம்மா டி.வி’ தொலைக்காட்சி சேவையை விரைவில் எதிர்பார்க்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg