Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காணி அபகரிப்பு குறித்து ஐ.நா. அதிகாரியிடம் எடுத்துரைத்தார் கிழக்கு முதல்வர்

In இலங்கை
Published: 10:06 GMT, Mar 29, 2017 |
0 Comments
1230
icon_com
This post was written by : Varshini

கிழக்கு மாகாணத்தில் படையினர் மற்றும் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்படாமை குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பிரதிநிதி ரிட்ஸு நெக்கனிடம், கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் எடுத்துரைத்துள்ளார்.

அத்துடன் தொல்பொருள் முக்கியத்துவம் என்ற போர்வையில் மேலும் பல காணிகளைக் கையகப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகள் குறித்தும் எடுத்துரைத்துள்ளார்.

திருகோணமலையில் உள்ள கிழக்கு முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற சந்திப்பில் கிழக்கு முதல்வர் இவ்விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.

கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்ட விதவைகளின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புதல், கிழக்கில் நிலவும் வறுமை மற்றும் வேலையில்லாப் பிரச்சினை போன்றன குறித்து இதன்போது எடுத்துரைத்த கிழக்கு முதல்வர், மாகாணத்தில் பொதுவான அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டாலும் தனிமனித வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதில் பல்வேறு சவால்களை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

ஏனைய மாகாணங்களில் தனியார் தொழிற்துறைகள் மற்றும் புதிய தொழிற்துறைகள் உருவாகின்ற போதும் கிழக்கில் அவ்வாறான எவ்வித வாய்ப்புக்களோ தொழிற்துறைகளோ இன்மையால் பெரும்பாலான இளைஞர் யுவதிகள் இப்பொழுது தொழில்வாய்ப்பின்றி பெரும் இன்னல்களை எதிர்நோக்கி வருவதாகவும், தற்போது முன்னெடுக்கப்படும் பட்டதாரிகளின் போராட்டம் தொடர்பாகவும் கிழக்கு முதலமைச்சர் ஐ.நா.பிரதிநிதியிடம் எடுத்துரைத்தார்.

இவற்றை செவிமடுத்த ஐ.நா பிரதிநிதி, கிழக்கில் புதிய தொழில்வாய்ப்புக்களை உருவாக்கவும் மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பவும் தேவையான முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்க தயார் எனவும் அதற்கான பேச்சுவார்த்தைகள் எதிர்காலத்தில் கிழக்கு மாகாண சபையுடன் முன்னெடுக்கப்படும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.

இச் சந்திப்பில் கல்வியமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி மற்றும் முதலமைச்சரின் செயலாளர் யூ.எல்.அப்துல் அஸீஸ் உட்பட பல அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.

estern province (2) estern province (1)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg