Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எந்த கட்சியும் வெளியிடாத வகையில் எமது தேர்தல் அறிக்கை வெளியாகும்: மாஃபா பாண்டியராஜன்

In இந்தியா
Updated: 10:32 GMT, Mar 29, 2017 | Published: 10:30 GMT, Mar 29, 2017 |
0 Comments
1138
icon_com
This post was written by : Elakkiya
201703291339390094_No-political-party-disclosing-theElection-Manifesto_SECVPF

இந்தியாவில் எந்த கட்சியும் வெளியிடாத வகையில் பன்னீர்செல்வம் தலைமையிலான அணியின் ஆர்.கே நகர் தேர்தல் தொகுதிக்கான தேர்தல் அறிக்கை நாளை (வியாழக்கிழமை) வெளியிடப்படும் என மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களிடம் கருத்து
தெரிவிக்கையில் பாண்டியராஜன் மேற்படி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ‘ஆர்.கே.நகர் தேர்தல் களத்தில் எங்கள் முதல் எதிரி தி.மு.க. எங்கள் பிரசாரம் அவர்களுக்கு எதிராகத்தான் அமையும். ஆர்.கே.நகரில் இன்று மாலை ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம் செய்கிறார்.

இதன்போது, மு.க.ஸ்டாலினின் குற்றச்சாட்டுககளுக்கு அவர் பதில் வழங்குவார். சசிகலாவும், தி.மு.க.வும் குடும்ப அரசியல் செய்கிறார்கள். குடும்ப ஆட்சி மீண்டும் வரக்கூடாது என்பதுதான் எங்கள் அணியின் குறிக்கோள்.

ஆர்.கே.நகர் தொகுதியில் எங்கள் அணியின் கை ஓங்கி வருகிறது. அதனால்தான் மு.க.ஸ்டாலின் எங்கள் மீது பாய்கிறார். முரண்பாடுகளின் முழு உருவமாக தி.மு.க. விளங்குகிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg