Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமைச்சரவை உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் பிரதமர் மே

In
Updated: 10:26 GMT, Mar 29, 2017 | Published: 10:26 GMT, Mar 29, 2017 |
0 Comments
1333
This post was written by : Sylviya

பிரித்தானிய பிரதமர் தெரேசா மே, இன்று (புதன்கிழமை) காலை டவுனிங் ஸ்ரீற் 10ஆம் இலக்க இல்லத்தின் அமைச்சரவை உறுப்பினர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

பிரெக்சிற் தொடர்பான உத்தியோகபூர்வ ஆவணங்களை தயாரிப்பது தொடர்பிலேயே குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது என அண்மையில் வெளியாகிய செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரெக்சிற் குறித்த பேச்சுவார்த்தைகள் ஐரோப்பிய ஒன்றியத்துடன் முறைப்படி ஆரம்பிக்கப்பட்டு 2019 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதிப்பகுதியளவில் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு முழுமையாக வெளியேறிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க, பிரித்தானியாவின் பிரதமராக பதவி வகித்தவர்களில் தற்போதைய பிரதமரான தெரேசா மேயிற்கே அதிகளவு பொறுப்பு சுமத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனெனில், பிரித்தானியாவின் விலகல் செயற்பாடுகளை கையாளும் அதே நேரம் ஸ்கொட்லாந்தின் கோரிக்கைகளையும் கையாண்டு முழு பிரித்தானியாவையும் பாதுகாக்கும் முயற்சியில் மே செயற்படுகின்றார் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg