Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சர்வதேச கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்தல்: முறியடிக்கும் பணியில் கனடிய கப்பல்

In கனடா
Updated: 10:37 GMT, Mar 29, 2017 | Published: 10:36 GMT, Mar 29, 2017 |
0 Comments
1159
This post was written by : Risha

மத்திய மற்றும் தென் அமெரிக்க கடற்பரப்பில் இடம்பெற்று வந்த பாரிய போதைப்பொருள் கடத்தலை முறியடிக்கும் வகையிலான சர்வதேச ரீதியிலான போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான பணியில் கனடிய அரச கடற்படை கப்பல்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

கடந்த 26 நாட்களாக முன்னெடுக்கப்பட்டுவந்த போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு பணியின் வாயிலாக இதுவரை 17 இடங்களிலிருந்து சுமார் 14 தொன்னிற்கும் அதிகமான கொகேயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரிபியன் மற்றும் கிழக்கு பசுபிக் பெருங்கடல் பகுதியில் இடம்பெற்றுவந்த அமெரிக்கா தலைமையிலான சட்டவிரோத கடத்தலை முறியடிக்கும் பணியில் கனடிய கடற்படை கப்பல் கடந்த பெப்ரவரி மாதம் இணைந்திருந்தது.

குறித்த போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு பணியின் பொது 30 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg