Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டெல்லி விவசாயிகளை நாளை சந்திக்கிறார் ராகுல் காந்தி?

In இந்தியா
Updated: 10:53 GMT, Mar 29, 2017 | Published: 10:52 GMT, Mar 29, 2017 |
0 Comments
1262
icon_com
This post was written by : Elakkiya
201703291506046379_Rahul-meets-tamilnadu-farmers_SECVPF

டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழக விவசாயிகளை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி நாளை (வியாழக்கிழமை) சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், வறட்சி நிவாரணம், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் இன்று 16 ஆவது நாளாகவும் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டின் பல பாகங்களிலும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு இதுவரை செவிசாய்க்கவில்லை என்ற நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், புதுச்சேரி மாநில முதலமைச்சர் வி.நாராயணசாமி, காங்கிரஸ் முன்னாள் நாடானுமன்ற உறுப்பினர் மணிசங்கர் அய்யர், ஆம் ஆத்மி கட்சி தலைவர்களில் ஒருவரான சோம்நாத் பாரதி, கேரளாவின் விவசாயத்துறை அமைச்சர் சுனில் குமார் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி நாளை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg