Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வகுப்புத் தடை விதிக்கப்பட்டமைக்கு எதிராக யாழ்.பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

In இலங்கை
Published: 10:59 GMT, Mar 29, 2017 |
0 Comments
1501
icon_com
This post was written by : Varshini

யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்தினால் வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ள 13 மாணவர்களையும் எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் மீள இணைக்காவிடின் அனைத்துப் பீடங்களையும் முடக்குவோம் என தெரிவித்து, பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் இன்று போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் இன்று (புதன்கிழமை) காலை தமது வாய்களை துணியால் கட்டி அமைதியான முறையில் இப் போராட்டத்தை முன்னெடுத்ததோடு, பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராக கண்டனத்தையும் வெளியிட்டனர்.

யாழ். பல்கலைக்கழகத்திற்கு கடந்த வாரம் புதுமுக மாணவர்களை வரவேற்கும் நிகழ்வின் போது இடம்பெற்ற அசம்பாவிதத்தின் பின்னர் கலைப்பீட மாணவர்கள் 13 பேருக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டதுடன், கலைப்பீடமும் துணை வேந்தரினால் கலைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

jaffna uni protest (3) jaffna uni protest (5) jaffna uni protest (4) jaffna uni protest (1)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg