Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விவசாயிகளுக்கு ஆதரவான தமிழ்நாடு காங்கிரஸ் குழுவின் கண்டன ஆர்ப்பாட்டம் பிற்போடப்பட்டது

In இந்தியா
Updated: 11:24 GMT, Mar 29, 2017 | Published: 11:23 GMT, Mar 29, 2017 |
0 Comments
1136
icon_com
This post was written by : Elakkiya
thirunavukarasu

தமிழக நலன்களுக்கு எதிராக மத்தியில் நரேந்திரமோடி அரசு வஞ்சகப் போக்குடன் செயற்படுவதை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் குழு சார்பாக எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி நடத்தப்படவிருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ஏப்ரல் 5 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், ‘ஏப்ரல் 3 ஆம் திகதியே தமிழக விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினர் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். அவர்களின் போராட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸூம் ஆதரவளிக்கின்றது. எனவே காங்கிரஸ் கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டம் 234 தொகுதிகளிலும் எதிர்வரும் ஏப்ரல் 5 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது’ என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg