Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பட்டினிச்சாவை தடுக்க ஐ.நா.வின் அழைப்பின் பேரில் கனடா நிதியுதவி

In கனடா
Updated: 11:10 GMT, Mar 29, 2017 | Published: 11:10 GMT, Mar 29, 2017 |
0 Comments
1256
icon_com
This post was written by : Risha
starv

நைஜீரியா, தென் சூடான், சோமாலியா மற்றும் யேமன் ஆகிய நாடுகளில் பட்டினியால் அவலநிலையை எதிர்நோக்கியுள்ள சுமார் 20 மில்லியன் மக்களுக்கு உதவும் வகையில் கனடா 120 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்கவுள்ளது.

குறித்த நாடுகளில் நிலவிவரும் அசாதாரண சூழ்நிலையானது, பாரிய மனதாபிமான நெருக்கடியை தோற்றுவிக்கவுள்ளதாக ஐக்கிய நாடுகள் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையிலேயே கனடாவினால் இந்த நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்டினியால் ஏற்படவுள்ள பேரழிவை தவிர்ப்பதற்கு 4.4 பில்லியன் அமெரிக்க டொலர் எதிர்வரும் ஜூலை மாதத்திற்குள் தேவைப்படுவதாக ஐ.நா. சுட்டிக்காட்டியுள்ளது.

அதன்படி கனடாவின் பங்களிப்பான 119.25 மில்லியன் அமெரிக்க டொலர் ஐ.நா. முகவர் மற்றும் அரச சார்பற்ற மனித நேய அமைப்புகளினூடாக வழங்கப்படவுள்ளது.

இவ்வாறாக திரட்டப்படும் நிவாரண தொகையை கொண்டு குறித்த நான்கு நாடுகளின் மக்களுக்கான உணவுப் பொருட்கள், சுகாதார சேவைகள், சுத்தமான குடிநீர், சுகாதார வசதிகள் மற்றும் அம்மக்களுக்கு வருமானத்தை ஈட்டித்தரக்கூடிய நடவடிக்கைகள் என்பன முன்னெடுக்கப்பட உள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg