Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மு.கா.வின் தலைவரை விமர்சித்த சட்டத்தரணி அன்சில், கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்

In இலங்கை
Published: 11:15 GMT, Mar 29, 2017 |
0 Comments
1231
icon_com
This post was written by : Varshini
ansil - slmc

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர் மற்றும் பாலமுனை அமைப்பாளர் பதவிகளிலிருந்து சட்டத்தரணி எம்.ஏ.அன்சில் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம் நேற்று (செவ்வாய்க்கிழமை) கட்சியின் தலைமையகம் தாருஸ்ஸலாமில் நடைபெற்றது. இதன்போதே, மேற்படி பதவிகளிலிருந்து அன்சிலை நீக்குவதாக, கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அறிவித்துள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் பாரிய குற்றங்களை புரிந்ததாக அண்மைக்காலமாக அன்சில் பகிரங்கமாக பேசிவரும் நிலையிலேயே, மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, கட்சியின் அரசியல் விவகாரச் செயலாளராக அன்சில் வகித்த பதவியிலிருந்தும் அவரை நீக்குவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg