Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கருத்துக்கணிப்பு தொடர்பில் ஐரோப்பா தலையிடக் கூடாது: பினாலி யில்டிரிம்

In ஐரோப்பா
Published: 11:47 GMT, Mar 29, 2017 |
0 Comments
1290
icon_com
This post was written by : Sylviya

துருக்கியில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடத்தப்படவுள்ள கருத்துக்கணிப்பில் ஐரோப்பா தலையிடக் கூடாது என துருக்கி பிரதமர் பினாலி யில்டிரிம் (Binali Yildirim) தெரிவித்துள்ளார்.

மேற்கறித்த கருத்தை அவர் நேற்று (செவ்வாய்கிழமை) துருக்கியின் கரமான் (Karaman) எனும் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு ரையாற்றும் போதே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், “ஐரோப்பா தனது விடயங்களில் மாத்திரம் கவனம் செலுத்தினால் அது போதுமானதாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.

துருக்கியின் கருத்துக்கணிப்பு விடயம் காரணமாக ஜேர்மனி மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு இடையிலான உறவுகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. குறித்த இரு நாடுகளும் துருக்கியின் கூட்டங்களை தடை செய்தமையே அதற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg