Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாட்டை பிளவுபடுத்தாமல் அதிகாரங்களை பகிரவேண்டும்: பிரதமர்

In இலங்கை
Published: 11:42 GMT, Mar 29, 2017 |
0 Comments
1157
icon_com
This post was written by : Varshini

நாடு பிளவுபடாத வகையில், ஒரே நாட்டிற்குள் அதிகாரத்தை பகிர்ந்தளிப்பது குறித்து சிந்திக்க வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மருதானை சுதுவெல பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட பௌத்த சிலையொன்றை இன்று (புதன்கிழமை) திறந்துவைத்து உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார். பிரதமர் தொடர்ந்து குறிப்பிடுகையில்-

”தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் போது நாட்டைப் பிரிக்காமல் அதிகாரங்களை பகிர்ந்தளிப்பது குறித்து சிந்திக்க வேண்டும். நாட்டின் ஒருமைப்பாட்டை பலப்படுத்துவதற்காக அதிகாரத்தை பகிர்ந்தளித்து, சகல மக்களுக்கும் தத்தமது மதங்களை வழிபடுவதற்கான சந்தர்ப்பம் உள்ளிட்ட விடயங்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

மேலும், மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை அதிகரிப்பது குறித்து வடக்கு முதலமைச்சர் மாத்திரமல்லாது தென்னிலங்கை முதலமைச்சர்களும் திருத்தங்களை முன்வைத்துள்ளனர். மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதானது நாட்டை பிரிப்பதாக அமையாது.

சகல இன மக்களும் ஐக்கியப்பட்டு இலங்கையர் என்ற அடையாளத்தை உருவாக்க வேண்டும். இதற்கு மத நல்லிணக்கமும் முக்கியமானது” என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg