Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரெக்சிற் விவகாரம் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது

In
Published: 11:56 GMT, Mar 29, 2017 |
0 Comments
1404
icon_com
This post was written by : Sylviya

இதுவரைக் காலமும் பலரது கவனத்தை ஈர்த்திருந்த பிரெக்சிற் விவகாரம், இன்று (புதன்கிழமை) பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் நடவடிக்கை அதாவது லிஸ்பன் விதியின் 50 ஆவது சரத்து செயலாக்கப்படுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கான பிரித்தானிய பிரதிநிதி சேர் டிம் பரோ (Tim Barrow), ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் டொனால்ட் டஸ்க்கிடம் பிரெக்சிற் குறித்த உத்தியோகபூர்வ கடிதத்தை கையளித்துள்ளார். குறித்த கடிதம் ஆறு பக்கங்களை கொண்டது என அண்மையில் வெளியாகிய தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg