Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேறுகின்றது: தெரேசா மே

In
Published: 12:55 GMT, Mar 29, 2017 |
0 Comments
1540
icon_com
This post was written by : Sylviya

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு உத்தியோகபூர்வமாக விலகும் நடவடிக்கைகளை பிரித்தானியா ஆரம்பித்துள்ளது என, பிரதமர் தெரேசா மே இன்று (புதன்கிழமை) தெரிவித்தார்.

பிரெக்சிற் விவகாரம் தொடர்பில் இன்று நாடாளுமன்றில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், “பிரித்தானியர்களின் விருப்பத்திற்கிணங்க லிஸ்பன் விதியின் 50 ஆவது சரத்தை முறைப்படி செயலாக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டாயிற்று. பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுகின்றது” என தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகும் அதே சமயம், எதிர்காலத்தில் அதனுடன் நெருங்கி செயற்படுவது தொடர்பிலும் அக்கறை செலுத்தப்படும் எனவும் மே குறிப்பிட்டார்.

பிரதமர் மேயின் சார்பாக பிரெக்சிற் குறித்த கடிதத்தை ஐரோப்பிய ஒன்றியத்திற்கான பிரித்தானியாவின் பிரதிநிதி டிம் பரோ, இன்று ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் டொனால்ட் டஸ்க்கிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg