Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வவுனியாவில் பொலிஸாருக்கு விருது வழங்கும் நிகழ்வு

In இலங்கை
Updated: 16:45 GMT, Mar 29, 2017 | Published: 16:45 GMT, Mar 29, 2017 |
0 Comments
1269
This post was written by : Vithushagan

வவுனியாவில் பொலிஸாருக்கு விருது வழங்கும் நிகழ்வு இன்று (புதன்கிழமை) வவுனியா மில் வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வு, வவுனியா மற்றும் மன்னார் பிராந்தியங்களுக்கான பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

வவுனியா மற்றும் மன்னார் பிரதேசங்களில் போதைவஸ்த்து, கொலை, கொள்ளை மற்றும் துஸ்பிரயோகங்களை கட்டுப்படுத்திய 48 பொலிஸ் அதிகாரிகளுக்கு பரிசாக பணத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

இதன்போது, வவுனியா மன்னாரில் குற்றங்களை கட்டுப்படுத்திய மற்றும் குற்றவாளிகளை கைது செய்த பொலிஸ் அதிகாரிகளுக்கு 22 இலட்சம் ரூபா பணம் பகிர்ந்தளிக்கப்பட்டது.

தனிநபருக்கான அதிகூடிய பணப்பரிசான 1 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் பணத்தை வவுனியா மாவட்டத்தின் விசேட குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி கே.ஏ.டி. பிரசாத் சிறிவர்த்தன பிரதி பொலஸ் மா அதிபரின் கரங்களால் பெற்றுக்கொண்டுள்ளனர்.

இதே போல் அதி கூடிய பணப்பரிசான 5 லட்சத்து 59 ஆயிரம் ரூபாய் பணத்தினை வவுனியா குற்றத்தடுப்புப் பிரிவு பெற்றுக்கொண்டுள்ளது.

அத்துடன் இந்த நிகழ்வில் கலை நிகழ்வுகளை வழங்கிய பாடசாலை மாணவர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டது. இதேவேளை, இந்த நிகழ்வில் வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிஸார் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

unnamed (17) unnamed (19)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg