Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சந்தியா ஏக்னலிகொடாவுக்கு விருது வழங்கினார் மெலனி டிரம்ப்

In இலங்கை
Published: 17:10 GMT, Mar 29, 2017 |
0 Comments
1394
icon_com
This post was written by : Vithushagan
_95373280_sandyaeknelygodajoins12otherwomenfromacrosstheworldinwashingtond.c.toreceivetheu.s.secretaryofstatesinternationalwomenofcourageawardfor2017

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் 2017 ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் நிகழ்வில், இலங்கை ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட, “உலகில் துணிச்சலான பெண்” எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளதாக  அமெரிக்கா இராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியின் மனைவி மெலானியா டிரம்பினால் இன்று (புதன்கிழமை) வொஷிங்டன் நகரில் நடைபெற்ற நிகழ்வில் வைத்து இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

இவரைப் போன்று உலக அளவில் காணப்படும் 13 பெண்கள் இவ்வாறு விருது வழங்கி கௌவிக்கப்பட்டுள்ளதாகவும் தூதரகம் அறிவித்துள்ளது.

தனது கணவனுக்காக மட்டுமன்றி காணாமல் போனவர்களின் உறவுகள் சார்பாகவும் போராடியவர் என்பதற்காக இவர் இந்த விருதுக்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுரகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட, மஹிந்த ராஜபக்ஷ  ஆட்சிக்காலத்தில் கடத்தப்பட்டு காணாமல் போனவர் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg