Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பக்தாத் சோதனைச்சாவடியை அதிரவைத்த கார்குண்டு தாக்குதல்: 17 பேர் உயிரிழப்பு

In உலகம்
Published: 03:35 GMT, Mar 30, 2017 |
0 Comments
1326
icon_com
This post was written by : Risha

ஈராக் தலைநகர் பக்தாத்தில் பொலிஸ் சோதனை சாவடியொன்றை இலக்குவைத்து இடம்பெற்ற தற்கொலை கார் குண்டு தாக்குதலில் சுமார் 17 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தலைநகரின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள சோதனைச் சாவடி ஒன்றின் அருகே வெடிப்பொருட்கள் அடங்கிய எண்ணெய் கொள்கலன் தாங்கியொன்றை வெடிக்கச் செய்தே குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று (புதன்கிழமை) இரவு மேற்கொள்ளப்பட்ட குறித்த தாக்குதலில் சுமார் 60 பேர்வரை படுகாயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களுள் மூவர் பொலிஸ் அதிகாரிகள் எனவும் ஏனையோர் பொதுமக்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும், இதற்கு முன்னர் ஐ.எஸ். தீவிரவாதிகளினால் இதே பாணியிலான பல்வேறு தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg