Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அம்பாந்தோட்டை துறைமுக விவகாரம்: இன்று கூடுகிறது விசேட அமைச்சரவை

In இலங்கை
Updated: 05:38 GMT, Mar 30, 2017 | Published: 04:29 GMT, Mar 30, 2017 |
0 Comments
1189
icon_com
This post was written by : Varshini
0112-1140x377

சர்ச்சைக்குரிய அம்பாந்தோட்டை துறைமுக விவகாரம் தொடர்பில் இறுதித் தீர்மானத்தை எடுக்கும் நோக்கில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (வியாழக்கிழமை) விசேட அமைச்சரவை கூட்டமொன்று நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போதும் அம்பாந்தோட்டை துறைமுகத்தின் உரிமம், பாதுகாப்பு ஆகியன குறித்து கலந்துரையாடப்பட்டிருந்தன. எனினும், இவ்விடயத்தின் முக்கியத்துவம் கருதி பிறிதொரு தினத்தில் இவ்விடயம் குறித்து ஆராய்வதாக தீர்மானிக்கப்பட்டது. அதன் அடிப்படையிலேயே இன்றைய கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 வீதப் பங்குகளைக் குத்தகைக்கு வழங்குவதற்கும், அங்க கைத்தொழில் வலயம் ஒன்றை அமைப்பதற்கும் சீன நிறுவனத்துடன் உடன்படிக்கை செய்துகொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், இதற்கெதிராக பலதரப்பினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

அத்தோடு, அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீன பிரசன்னம் ஏற்படுவதை இந்தியாவும் விரும்பாத காரணத்தால், ராஜதந்திர ரீதியிலான அழுத்தங்களை இலங்கைக்கு இந்தியா பிரயோகித்து வருகின்றது.

இவ்வாறான ஒரு சூழலில் இன்றைய தினம் இவ்விடயம் தொடர்பாக முக்கிய தீர்மானமொன்று எட்டப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg