Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரயில் மறியல் போராட்டத்திற்கு தயாராகும் இளைஞர்கள்: கியூ பொலிஸார் எச்சரிக்கை

In இந்தியா
Updated: 05:02 GMT, Mar 30, 2017 | Published: 04:47 GMT, Mar 30, 2017 |
0 Comments
1180
icon_com
This post was written by : Varshini
800_kzrttgy6mnqjqiytayygkmizocor4tpm

விவசாயக் கடனை தள்ளுபடி செய்யுமாறு கோரி டெல்லியில் தமிழக விவசாயிகள் கடந்த சில நாட்களாக போராடி வரும் நிலையில், அவர்களுக்கு ஆதரவாக இந்திய இளைஞர் கூட்டமைப்பினர் ரயில் மறியல் போராட்டத்திற்கு தயாராவதாக தமிழக ரயில்வே பொலிஸாருக்கு ‘கியூ’ பிரிவு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த எச்சரிக்கையை அடுத்து சென்னையில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களான மத்திய மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ரயில் நிலையத்திற்குள் பிரவேசிக்கும் சகல பயணிகளும் பலத்த சோதனைக்குட்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடந்த ஜனவரி மாதத்தில் மெரீனா கடற்கரையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் இறுதியில் வன்முறையில் முடிந்தது. இதனைக் கருத்திற்கொண்டே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg