Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நல்லாட்சிக்கு தேர்தல் பயம் வந்துவிட்டது: பீரிஸ்

In இலங்கை
Updated: 05:07 GMT, Mar 30, 2017 | Published: 05:07 GMT, Mar 30, 2017 |
0 Comments
1211
This post was written by : Varshini

உள்ளூராட்சி சபைத் தேர்தலை இரண்டு வருடங்கள் பிற்போட்ட அரசுகள் உலகில் வேறெங்கும் இல்லையென தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சரும் மஹிந்த அணியின் முக்கியஸ்தருமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், தேர்தலில் தோல்வியடைந்துவிடுவோம் என்ற பயத்திலேயே அரசாங்கம் தேர்தலை பிற்போட்டு வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

அரசமைப்பை மீறி செயற்பட்டு வருகின்ற காரணங்களால் அரசு தேர்தலில் படுதோல்வியடையும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பொரளை என்.எம்.பெரேரா கேந்திர நிலையத்தில் நேற்று (புதன்கிழமை) பொது எதிரணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அத்தோடு, நல்லாட்சியின் ஆயுட்காலம் இன்னும் இரண்டரை வருடங்களில் முடிவடையவுள்ள நிலையில், இன்னும் மூன்று நான்கு வருடங்களில் பாரிய அபிவிருத்திகளை முன்னெடுப்போம் என அரசாங்கம் பொய்யுரைத்து வருவதாக மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய நிலையில், எஞ்சியுள்ள இரண்டரை வருடங்களையேனும் கொண்டுசெல்ல முடியாத நிலையில் அரசாங்கம் உள்ளதென்றும் பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg