Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மியாமி ஓபன் டென்னிஸ்: பிளிஸ்கோவா-வோஸ்னியாக்கி அரையிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்

In டெனிஸ்
Updated: 05:42 GMT, Mar 30, 2017 | Published: 05:31 GMT, Mar 30, 2017 |
0 Comments
1178
icon_com
This post was written by : Anojkiyan
vs

அமெரிக்காவில் நடைபெற்றுவரும் மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடரின், பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டியில், கரோலினா பிளிஸ்கோவா மற்றும் கரோலினா வோஸ்னியாக்கி ஆகியோர் அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்தனர்.

முதல் காலிறுதி போட்டியில் 3ஆம் நிலை வீராங்கனையான செக்குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா, தரவரிசையில் 29வது இடத்தில் உள்ள குரோஷியாவின் மிர்ஜனா லுசிச்-பரோனியை எதிர்கொண்டார்.

மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய பிளிஸ்கோவா 6-3, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்குள்  நுழைந்தார்.

மற்றொரு காலிறுதி போட்டியில், டென்மார்க்கின் கரோலினா வோஸ்னியாக்கி, செக்குடியரசின் லூசி சபரோவாவை சந்தித்தார் மிகவும் விறுவிறுப்பான இப்போட்டியில், வோஸ்னியாக்கி 6-4, 6-3 என்ற நேர் செட்டில் லூசி சபரோவாவை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்குள் காலடி எடுத்துவைத்தார்.

அரையிறுதி சுற்றில் கரோலினா பிளிஸ்கோவாவும், கரோலினா வோஸ்னியாக்கியும் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg