Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டெக்சாஸில் தேவாலய பேருந்து விபத்து: 12 பேர் உயிரிழப்பு

In உலகம்
Published: 05:13 GMT, Mar 30, 2017 |
0 Comments
1217
icon_com
This post was written by : Risha

அமெரிக்காவின் இரண்டாவது பெரிய மாநிலமான டெக்சாஸில் கிறிஸ்தவ தேவாலயமொன்றிற்கு சொந்தமான பேருந்தொன்று பிக்-அப் டிரக் வண்டியுடன் மோதி விபத்திற்குள்ளானதில் அதில் பயணித்த 12 தேவாலய குழு உறுப்பினர்கள் உயிரிழந்துள்ளனர்.

நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற குறித்த விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக டெக்சாஸ் பொது பாதுகாப்புத்துறை செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கொடிய விபத்தில் நேர்ந்த உயிரிழப்புகளுக்கு வருந்துவதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும் டெக்சாஸ் மாநில ஆளுநர் கிரெக் அபோட் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg